Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Advertiesment
Nirmala Sitharama
, வெள்ளி, 15 மே 2020 (16:21 IST)
கடந்த 13 ஆம் தேதி  பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும்போது  ரூ. 20 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி  மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதா ராமன், முக்கியமான திட்டங்களை அறிவித்தார். இதற்குப் பல பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக நேற்று அவர் சில முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார்.  இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி ரூபாயிலான் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் சீதா ராமன் செய்தியாளர்களிடம்  தெரிவித்து வருகிறார்.

அதில், வேளாண் துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


வேளாண்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  பால் உற்பத்தியிலும் கரும்பு உற்பத்தியிலும், மீன் பிடித்தொழிலிலும் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. அதனால் 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாகவும்,  நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரமரின்  கிஷான் நிதியில் இருந்து ரூ.18, 700 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.6400 கோடி வரை விவசாயிகளால் கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தினமும் 360 லிட்டர் பால் தேவை என்கிற நிலையில் ஊரடங்கு காலத்தில் 560 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது. கூடுதலாக பால் உற்பத்தி செய்யப்பட்ட பால் சுமார் 4100 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு   1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் .
 
மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதியாகும் இறால் பண்ணைகளுக்கான பதிவு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
 
மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
!
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் பாதிப்பால் களையிழந்த ‘மலைகளின் ராணி’ - முடங்கிய ஊட்டி சுற்றுலாத்தளங்கள்