Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 குழந்தைகள் இருந்தால் அரசு வேலை இல்லை: ஆப்பு வைத்த புதிய கொள்கை

Advertiesment
ஹிமந்தா பிஸ்வா ஷர்மா | வரைவு | மக்கள்தொகை கொள்கை | சுகாதாரத்துறை | குழந்தைத் திருமணம் | கல்வித்துறை | இரண்டு குழந்தைகள் | அரசு வேலை | அசாம் சட்டப்பேரவை | No governemt job | more than 2 children | legal age of marriage | draft population policy | Child marriage |
, ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (22:03 IST)
சீனாவில் ஒரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் பல்வேறு சலுகைகளை கட் செய்த நிலையில் அந்த நாடே தற்போது திருந்தி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதித்துள்ளது. இந்த நிலையில் அசாம் மாநில அரசின் புதிய மக்கள்தொகை கொள்கைக்கான வரைவு இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி 2 குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை மறுக்கப்படும்.



 


ஒருவேளை அரசு வேலை பெற்றாலும், அவர்களுக்கு எந்தவிதமான பதவி உயர்வும் இருக்காது. அதுமட்டுமின்றி அரசு பணியில் இருக்கும் ஒருவர் குழந்தை திருமணம் செய்து கொண்டால் அவர் பதவி இழப்பார்' என்று அந்த புதிய கொள்கை கூறுகின்றது.

மேலும் இந்த வரைவு கொள்கையில் பெண் குழந்தைகளுக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை இலவசம், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21ஆக மாற்றுவது, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த புதிய கொள்கை குறித்து ஜூன் மாதம் வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் பின்னரே சட்டப்பேரவையில் இதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அசாம் மாநில சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் ஹிமந்தா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா? நாளை தேர்தல் ஆணையம் முடிவு