பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தனிநபர் மீதான வருமான வரி நீக்கம் என்பதை அமலாக்கம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் தனிநபர்கள் மற்றும் மாத வருமானம் பெறுபவர்கள் செலுத்தும் வருமான வரி முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, ஆர்த்கிராந்தியின் அனில் போகில் உள்ளிட்ட பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 2016ஆம் ஆண்டு மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனில் போகில் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமான வரி முறையை நீக்கம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.