சிபிஐ தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை என ப.சிதம்பரம் டிவிட்.
இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வு துறை (சிபிஐ) இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி சோதனை குறித்து சி.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள எனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளனர். டெல்லியில் உள்ள எனது அலுவலக வீட்டிலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காலை முதல் நடந்து வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. சிபிஐ தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் சோதனை நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.