26 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த பாரதிய ஜனதாவுக்கு மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக 26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கி உள்ளது என்றும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட பாஜகவுக்கு கிடைக்காது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் ஆசிரியர் பணி நீக்க விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் சிபிஐ அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது என்றும் தூர்தர்ஷனையும் காவிமயம் ஆக்கிவிட்டார்கள் என்றும் இனி அதில் பாஜக மற்றும் மோடி பற்றி மட்டுமே பேசுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு ஓட்டு கூட பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்காது என்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.