இந்தியா–பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்றும், மனித குலத்திற்கே தோல்வி ஏற்படும் என்றும் நேபாளத்தை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வரும் நிலையில், நேபாளத்தில் மனித உரிமைகள் குழு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பதட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மற்றும் அமைதி சங்க தலைவர் கிருஷ்ணா பஹாடு தெரிவித்துள்ளார்.
இந்த போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது; மனிதகுலம் மட்டுமே தோற்கடிக்கப்படும். அமைதியில் தான் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தெற்காசியாவையே போர் இல்லாத மண்டலமாக மாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதம் எந்த அளவுக்கு மோசமானதோ, அதே அளவுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதும் சட்டபூர்வமானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏன் அதனை வளர்க்கிறது என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணா பஹாடு, இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிக்கான வழியை தேட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.