உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக கடந்த சில நாட்களாக மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உக்ரைனில் இருந்து மீட்பு விமான சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கடைசி விமானம் தாயகம் திரும்பியது.
சுமி என்ற பகுதியில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் அந்த விமானத்தில் தாயகம் திரும்பினர். இதனையடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியபோது இனிமேல் மீட்பு விமான சேவை வழங்கப்படாது என்றும் இந்தியர்கள் வேறு யாராவது உக்ரைனில் இருந்தால் அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே தாயகம் திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.