பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து ஒரு மேடையில் ஸ்டாலின் முழங்கினார்.ஆனால் அவரது குரல் ஒருகை ஓசை போலவே அதிக சப்தமில்லாமல் தனித்து ஒலித்தது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியும் மம்தா பானர்ஜிக்கு நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதி உள்ளது என்று கூறியவர். இப்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள மக்கள் கையில் செலவுக்கு பணம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்கேற்ப மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவுத்துள்ளார்.
மேலும் ராகுல் தற்போது சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நாட்டில் யாரும் செலவுக்கு பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.