Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்பத்தோடு உடலுறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது! – ஒடிஷா உயர்நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (13:40 IST)
ஒடிசாவில் பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் விருப்பத்தோடு செக்ஸ் வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கூறியுள்ளது.

ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியை சேர்ந்தவர் அச்யுத் குமார், இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி நெருங்கி பழகியல் நிலையில் உடல் ரீதியான உறவிலும் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் இருமுறை கர்ப்பமாகி பிறகு கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்யுத் குமார் மீது அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து அச்யுத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கீழ் நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்த நிலையில், அச்யுத் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் ஒரு பெண் மற்றும் ஆண் இருவரும் விருப்பப்பட்டு பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது. அப்படியிருக்க பெண்கள் விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் விவகாரங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை பயன்படுத்துவது சரிதானா? என கேள்வியெழுப்பியது.

பிறகு அச்யுத் குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் சம்பந்தபட்ட பெண்ணை மிரட்ட கூடாது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்