வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அத்துடன் அனைத்து மாநிலங்களையும் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்மட்ட குழு எதற்காக அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் நேற்று கூடியது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக சட்ட திருத்தங்கள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உடன் ஆலோசனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.