ஆந்திர மாநிலத்தில், 12 வருடங்களாக, தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பிச்சைக்காரர் நேற்று இறந்தார். அவரது பையில் இருந்த ரூ. 3 லட்சம் பணத்தை தர்கா நிர்வாகத்திடம் போலீஸார் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் குஜ்நக்கல் என்ற பகுதியில் ஒரு தர்கா உள்ளது. இங்கு பஷீர் (75) என்பவர் சுமார் 12 வருடங்களாகப் பிச்சை எடுத்து வந்தார்.
தர்காவுக்கு வந்து தொழுகை நடத்துபவர்களுக்கு பஷீர் நன்கு பழக்கம் ஆனதால், அவருக்கு உணவும், பணமும் கொடுத்துவந்துள்ளனர். அதனால் இரவில் அந்த தர்கா வாசலிலேயே படுத்துறங்கிக் கொள்வார்.
இந்நிலையில் பஹீர் நேற்று காலை தர்கா முன்பு நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து பஷீரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்ததையும் உறுதி செய்தனர்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து தர்காவுக்கு வந்த போலீஸர், பஷீரின் பையை பரிசோதித்தனர். பின்னர் அவரது உறவினர்கள் குறித்து எதாவது தகவல் உள்ளதால் என்றும் தேடினார்.. அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்துள்ளது. அவரது உறவினர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாததால் அந்த பணத்தை போலீஸார் தர்க நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
பிச்சைக்காரரிடம் லட்சக்கணக்கில் பணம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.