தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீடித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த மாதம் 19ஆம் தேதி டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகமாக பரவி வருவதால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் காட்டுக்குள் வந்துள்ளதாகவும் இந்த வெற்றி ஊரடங்கு காரணமாகத்தான் கிடைத்துள்ளதாகவும் அதனால் அடுத்த திங்கட்கிழமை வரை ஊரட்ங்கை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் 35 சதவீதமாக இருந்த கொரோனா தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது