Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மாபியா கும்பலின் அட்டூழியம் : ஒருவர் சுட்டுக் கொலை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:00 IST)
நம் தேசத்தின் தலைநகரான டெல்லியில் புற்றீசலைப்போல தற்போது போதை பொருள் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒருநாளில் சராசரியாக  சில லட்சங்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களைக் குறிவைத்து இந்த போதைக் கும்பல் செயல்படுவதாகவும் தெரிகிறது.
 
தற்போது இந்த போதைக்கு எதிராக போராடி  வருகிற தைமூர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ரூபேஷ் குமார் இந்த போதைக் கும்பலால் சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
இவர் போதை பொருள் விற்கும் மாபியா கும்பலுக்கு எதிராக செல்பட்டதால்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
டெல்லியில் குறிப்பாக போலீஸார் அதிகம் இருக்கும் பகுதியில் ரூபேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் போலீஸார் இந்த படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments