Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு குறித்த தகவல் அளிப்பதில் திடீர் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 6 மே 2020 (08:31 IST)
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினந்தோறும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தகவலின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை தினமும் இருவேளை அறிந்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இனிமேல் காலை, மாலை என இருவேளைகளில் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கை தகவல்கள் வெளி வராது என்றும் காலையில் காலையில் மட்டுமே வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
காலை, மாலை என இருவேளையும் மத்திய அரசுக்கு கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தபோது நாள் ஒன்றுக்கு காலையில் எத்தனை பேர் மாலையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து வந்தனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையினர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு ஏற்கனவே தினந்தோறும் மாலை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments