ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்த நிலையில் அதை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. இவ்வளவுக்கும் சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாகிஸ்தான் வாங்கி குவித்த நிலையில், அந்த ஆயுதங்களால் இந்தியாவின் தாக்குதலை தடுக்கவும் முடியவில்லை. இந்தியாவின் மீது ஒரே ஒரு தாக்குதலை கூட வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.
ஆனால் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா, சுதர்சன சக்கரம் என்ற ஏவுகணையையும் ஆகாஷ் என்ற ஏவுகணையையும் ஏவிய நிலையில், அதனால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. சீனாவின் ஆயுதத்தை நம்பி பாகிஸ்தான் ஏமாந்தது ஆபரேஷன் சிந்தூர் மூலம் தெரிய வந்துள்ளது.
அதனால், சீனாவும் போலி தயாரிப்புகளை மட்டுமே தயாரித்துள்ளது என்ற வெட்ட வெளிச்சமும் உலகிற்கு தெரிய வந்துள்ளது. அமெரிக்காவுக்கு நிகராக ஒரு மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக சீனா மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் தயாரிப்புகள் பாகிஸ்தானில் படு தோல்வி அடைந்தது. இதனால் சீனாவுக்கும் சேர்த்து ஆபரேஷன் சிந்தூர் ஆப்பு வைத்ததாக கருதப்படுகிறது.