குடியுரிமை சட்டம் குறித்த விமர்சனங்களுக்கு டிவியில் வந்து பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பரிந்துரைத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடியும் குடியுரிமை சட்டம் யாரையும் வெளியேற்றும் சட்டம் அல்ல, மாறாக குடியுரிமையை வழங்குவதற்கான சட்டம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கருத்துகளை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம். அதில் ”பாரத பிரதமர் குடியுரிமை சட்டம் குடியுரிமை வழங்குவதற்காக என கூறியுள்ளார். ஆனால் நாம் அது குடியுரிமையை பறிப்பதாகவே எண்ணுகிறோம். பிரதமர் இதன் மீதான கேள்விகளை எதிர்கொள்வதில்லை. அவர் விமர்சகர்களின் கேள்விகளுக்கு தொலைகாட்சி மூலமாக பதிலளிக்க வேண்டும். அதை பார்த்த பின்பு மக்கள் முடிவெடுத்துக் கொள்ளட்டும்” என கூறியுள்ளார்.