Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாய் திறக்காத ப.சிதம்பரம்; அடுத்து என்ன? குழப்பத்தில் சிபிஐ!

Advertiesment
ப.சிதம்பரம்
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:47 IST)
ப.சிதம்பரம் 5 நாள் விசாரணையில் சிபிஐ-யின் கேள்விகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் மெளனமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளனர். மேலும் ப.சிதம்பரம் காவலை நீடிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. 
ப.சிதம்பரம்
இதனிடையே சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையின் போது ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் விடுதலையாகிவிடுவார். மாறாக காவல் நீடிக்கப்பட்டால் மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை வரும். 
 
இந்நிலையில் அமலாகத்துறை அவரை கைது செய்ய செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மட்டுமே தடை விதித்துள்ளது. அதன்பின்னர் அமலாக்கத்துறை கைது செய்தால் ப.சிதம்பரம் தரப்பிற்கு மேலும் சிக்கல் உண்டாகும் என தெரிகிறது.
ப.சிதம்பரம்
அதேபோல், சிபிஐ காவலில் இந்த ப. சிதம்பரத்திடம் ஐந்து நாட்களில் தினமும் 6 - 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
 
பெரும்பாலும் சிபிஐ கேட்ட கேள்விக்கு எல்லாம் அவர் மௌனமாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள். இதனால் மீண்டும் அவரை காவலில் எடுத்தாலும் இதேபோல் மெளனம் காத்தால் வழக்கு குறித்த உண்மை வெளிவராதே என்ற கவலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர் சிபிஐ தரப்பு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுத்தப்பட்டது – வேதாரண்யத்தில் பதட்டம் நீங்குமா ?