Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் இடையே போகும் ஒரே ரயிலை நிறுத்தியது பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:27 IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கும் தீர்மானத்தால் இந்தியாவோடு தீவிர முரண்பாட்டை காட்டி வருகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை திரும்ப அனுப்பினார்கள். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கேட்டுக்கொண்ட நிலையில் அடுத்ததாக மற்றொரு தடையை விதித்திருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே செல்லும் ஒரேயொரு ரயில் சேவையான சம்ஜவுதா எக்ஸ்பிரஸை நிறுத்தியுள்ளது பாகிஸ்தான். 1976ம் ஆண்டு முதல் இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தான் லாகூர் வரைக்கும் பயணித்து வந்தது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ். பின்னாட்களில் காலிஸ்தான் அமைப்பின் அச்சுறுத்தலால் லாகூர் முதல் அட்டாரி வரை தூரம் குறைக்கப்பட்டது.

தினமும் இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் தற்போது வாரம் இருமுறை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மசோதாவால் இந்த ரயிலை பாகிஸ்தானுக்குள் பயணிக்க அனுமதிப்பதில்லை என தடை விதித்துள்ளது தற்போது இந்த ரயில் வாகா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments