இந்தியாவின் பொருளாதார சூழலை குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து உயர்ரக கள்ள நோட்டுகளை இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடுவதாக தேசிய புலனாய்வு துறை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு முன்பிருந்தே பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய புலனாய்வு கூட்டத்தில் பாகிஸ்தான் சைபர் வலைதளங்கள் மூலமாக ஊடுருவல் மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடுதல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
உயர்ரக கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு வங்க தேசம் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுவதாக அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற கள்ள நோட்டுகள் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு பிடிபட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.