பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் காரணமாக பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன.
அதில் குறிப்பாக இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் நுழையக்கூடாது என தடை விதித்தது. அதேபோல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அரசு அதன் பின்னர் பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவுக்கு நுழைய தடை என அறிவிப்பு வெளியிட்டது.
இதனை அடுத்து பாகிஸ்தானில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் செல்வதற்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சுற்றி சீனா வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது,
இந்த நிலையில் இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கத்திய விமான நிறுவனங்கள், பாகிஸ்தானின் வான்வெளியை தவிர்த்து நீண்ட வழிகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. இது பாகிஸ்தானுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதற்கு முன், தனது வான்வெளியை பயன்படுத்தும் விமானங்களுக்கு பாகிஸ்தான் அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தது. தற்போது அந்த வருவாயின் பெரும்பகுதி நிறுத்தப்பட்டு உள்ளது.
மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் பாகிஸ்தானுக்கு சிக்கல் மேல் சிக்கல் தொடருகிறது!!
Edited by Siva