Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:21 IST)
இந்தியாவின் விமானப்படைத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ராணுவம் பதிலடிக் கொடுக்கும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா விமானப் படை இன்று பாகிஸ்தான் எல்லையில் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. பாலக்கோட் பகுதியில் தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்களும் அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனரும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கார்கில் போருக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்டப் பலக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துப் பாராட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலால் இந்திய எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரம் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு சரியானப் பதிலடிக் கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இதுகுறித்து ‘ இந்த தாக்குதலை அடுத்து தற்காப்புக்காகத் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் இத்தகையப் பதிலால் இரு நாட்டு எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments