பிரதமர் மோடி பகோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்புதான் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மோடிக்கு ஆதரவாக அமித் ஷா நாட்டில் பகோடா விற்பனை செய்வது கூட வேலைவாய்ப்புதான். டீ விற்றவர் மோடி நாட்டின் பிரதமரானார். அதேபோல் பகோடா விற்பாவரின் மகன் நாளை பெரிய தொழிலதிபராக முடியும் என்று கூறினார்.
இதனால் பக்கோடா விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா? என எதிர்க்குரல் எழுந்தது. மேலும், இளைஞர்கள் ‘மோடி பக்கோடா.. அமித்ஷா பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர்.
கடந்த ஒரு வாரமாக எங்கும் பகோடா, எதிலும் பகோடாவாக உள்ளது. இதனால், கூகுளில் அதிகமுறை பக்கோடா தேடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்தில் அதிகமுறை தேடப்பட்டுள்ளதாம்.