பான் பீடா கடையை திறந்ததும் முண்டியடித்த கூட்டம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நாளை முதல் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திடீரென நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள பான் பீடா கடை ஒன்று சட்டவிரோதமாக திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் முண்டியடித்துக்கொண்டு பான்பீடா மற்றும் புகையிலை பொருட்களை வாங்க குவிந்தனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சமூக விலகலை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு பான்பீடா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட இந்த அளவுக்கு மக்கள் முண்டியடித்தது இல்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த குஜராத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை தடியடி நடத்தி பான்பீடா வாங்க வந்தவரக்ளை கலைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்கும் கடைக்காரரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த 12000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்/ இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது