பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டுகள் முடக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது.
அப்படி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்ட் முடக்கப்படும். பான் கார்ட் முடக்கப்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது.
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால் வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்கு சென்று இணைக்கவும்.
மேலும், ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்கை பயன்படுத்தவும்.