நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இதற்கு உடன்படவில்லை என்பதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் செய்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்ட நிலையில் அது தோல்வி அடையவே வேறு வழி இன்றி நாள் முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.