Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (16:39 IST)
நாடாளுமன்ற குழு கூட்டத் தொடர் எப்போது என்பது குறித்து அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளையும் கூட்டக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆன தினத்தை கொண்டாடும் நிகழ்வும் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களின் தேர்தல் நடைபெற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் தேர்தல் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதா, "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் காரசாரமான எதிர்க்கட்சிகள் விவாதங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலங்கானாவில் தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..!

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? கஸ்தூரிக்கு ஆ ராசா கண்டனம்..!

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை.. பள்ளிகளை மூடும் பாகிஸ்தான் அரசு..!

விஜய்யின் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடும் என சீமானுக்கு அச்சம்: – எம்பி மாணிக்கம் தாகூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments