மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஊருக்குள் முதலை புகுந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தென்மெற்கு பருவமழை பருவமழை பெய்து வரும் நிலையில், மத்திய பிரதேச மா நிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,ஊருக்குள் நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் கால்வாயில் இருந்த முதலை ஒன்று வெள்ளை நீடில் ஊருக்குள் புகுந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த தேசிய பூங்காவின் மீட்புக் குழுவினர் தெருக்களில் சுற்றிய முதலையைப் பிடித்தனர்.
இந்த முதலை 8 அடி நீளமுடையதாகும். பிடிக்கப்பட்ட இந்த முதலையை சங்கியா சாகர் ஏரியில் விட்டுவிட்டனர்.