நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் மூடப்படும் என்ற பயத்தில் மக்கள் மார்க்கெட்டை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல இடங்களில் உணவு பொருட்கள், காய்கறிகளை வாங்க கூட்டம் கூட்டமாய் குவிந்து வருகின்றனர்.
ஐதராபாத்தில் எர்ரகட்லா மார்க்கெட்டில் மக்கள் பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். ஊரடங்கு தடை விதிக்கப்பட்டால் காய்கறி மார்க்கெட் மூடப்படும் என வதந்தி பரவியதால் மார்க்கெட்டில் கூடிய மக்கள் வேகமாக காய்கறிகளை அள்ளி செல்ல தொடங்கியுள்ளனர். கையில் அகப்பட்ட பொருட்களையெல்லாம் மக்கள் அள்ளி செல்ல ஏதும் செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்துள்ளனர்.