நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேட்டி அளித்த போது அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினார்
ஆனால் இன்று பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் வரும் பத்தாண்டுகளுக்கு பெட்ரோல் டீசலை கொண்டு வர முடியாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று மாநிலங்களவையில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி அவர்கள் மத்திய மாநில அரசுகள் கூட்டாக பெட்ரோலிய பொருட்கள் மீது மட்டும் 5 கோடி ரூபாய் அளவுக்கு வரி வசூலிக்கிறது
எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஒரு ஆண்டுக்கு ஏற்படும். எனவே இந்த இழப்பை எந்த மாநிலமும் ஏற்றுக் கொள்ளாது
எனவே அடுத்த பத்தாண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டின் கீழ் கொண்டு வர முடியாது என்று கூறினார். நிதி அமைச்சரின் கருத்துக்கு நேர்மாறாக சுஷில்குமார் யோசி சுசில்குமார் மோடியின் கருத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது