Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் & டீசல் தட்டுப்பாடு - பெட்ரோலிய அமைச்சகம் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (09:26 IST)
நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து இருப்பதால் உள்ளூர் மட்டத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளது என மத்திய அரசு விளக்கம். 

 
கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணையை வாங்கி வைத்து இருப்பதால் பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் இன்னொரு தரப்பு கூறி வருகிறது.
 
இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட்டது. இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது. 
 
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து இருப்பதால் உள்ளூர் மட்டத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் உறுதி செய்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments