Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! – நாளை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (09:41 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. முன்னதாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதுவரை சுமார் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் வேகமாக செயல்படாவிட்டால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சில வருடங்களாவது ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments