Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை மீட்க அமைச்சர்களை அனுப்ப முடிவு?? – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:58 IST)
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்களை ஈடுபடுத்துவது குறித்து இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்க இந்திய அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவும், அந்த நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments