Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சர்வதேச யோகா தினம்; அதிகாலையே யோகா செய்த பிரதமர் மோடி!

yoga
, செவ்வாய், 21 ஜூன் 2022 (09:22 IST)
இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி முறை தற்போது பல நாடுகளிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக யோகா தினம் பிரம்மாண்டமாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் யோகா தினம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர் “யோகா பயிற்சி உடல், மனம் இரண்டிற்கும் அமைதியை தருகிறது. சீராக வைத்திருக்க உதவுகிறது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் யோகா செய்வதன் மூலம் உலகளாவிய அமைத்திக்கான சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
யோகா பயிற்சியால்தான் மக்களையும், நாடுகளையும் ஒன்றிணைக்க முடியும். இந்த முழு பிரபஞ்சமும் நமது உடல் மற்றும் ஆன்மாவிலிருந்து தொடங்குகிறது. யோகா செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் அனைத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் காட்டுல மழை... பொதுக்குழு நடந்த 2300 நிர்வாகிகள் ஆதரவு!