Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டூ படேல் சிலை; சிறப்பு ரயில்கள் தொடக்கம்! – கொடியசைத்த பிரதமர்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (14:32 IST)
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து சர்தார் படேல் சிலை உள்ள கெவாடியா செல்ல 8 சிறப்பு ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் நினைவாக நிறுவப்பட்ட சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டது. இந்த சிலை உள்ள பகுதியில் பூங்காக்களும் அமைக்கப்பட்டு சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து சிலை அமைக்கப்பட்டுள்ள கெவாடியா பகுதிக்கு வர 8 சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தொடங்கும் இந்த புதிய ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனால் கூடுதல் ரயில் சேவை கிடைப்பது மக்களுக்கு பயண சிக்கலை தவிர்க்கும் என்பதோடு, சுற்றுலா துறையும் வளர்ச்சியடையும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments