இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று பிரதமர் மோடி அவர்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பல்வேறு வீரர்கள் போராடிய நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் முக்கியமானவராக திகழ்கிறார். ஆசாத் ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரை அவர் எதிர்த்த போக்கு மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தியது.
இன்று நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்” என்று தெரிவித்துள்ளார்.