கடவுளின் தேசமான கேரளா கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சிதைந்து போயுள்ளது. அம்மாநில மக்களின் துயர் துடைக்க நாடு முழுவதிலும் இருந்து உதவிக்கரம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட கேரளா சென்றடைந்தார் பிரதமர் மோடி. இதன்பின்னர் சற்றுமுன் தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடியை கேரள மாநில கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
இன்று ஹெலிகாப்ட்ரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி அதன்பின்னர் கேரளாவுக்கான நிதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது