பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்று அவர் தனது சொந்த தொகுதிக்கு செல்ல உள்ளார்
வாரணாசி தொகுதியில் உள்ள மிர்சாமுரத் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்ற இருப்பதாகவும் அதன் பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாண்டியா - ராஜதலாப் இடையே 2447 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு வழி சாலையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு ஆய்வு பணிகளை பார்வையிட உள்ளதாகவும் கார்த்திகை பூர்ணிமா திருவிழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் அங்கு 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் பிரம்மாண்டமான விழாவை அவர் கண்டு ரசிக்க உள்ளதாகவும் அதன் பின் இரவில் நடைபெறும் ஒலி ஒளி காட்சியை பார்வையிட்ட பின்னர் இரவு டெல்லி திரும்புவதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன