நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் என்றவர் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியும் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ளது.
இதனை இஸ்ரோ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தற்போது சல்பர் இருப்பது இரண்டு கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நிலவின் தென் துருவத்தில் வேறு என்னென்ன கனிமங்கள் இருக்கும் என்பதையும் பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து வருவதாகவும் இன்னும் நமக்கு ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.