சுப்ரீம் கோர்ட் வழங்கிய சில தீர்ப்புகளை விமர்சனம் செய்யும் வகையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது டுவிட்டரில் சில கருத்துகளை பகிர்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று விசாரணை முடிந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கின் தீர்ப்பினை அளித்தது. இந்த தீர்ப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது