ஜன் ஸ்வராஜ் என்ற பெயரில் இயக்கம் தொடங்குவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் இல்லை என தெரிவித்தார். பின்னர் தனது சமீபத்திய டிவிட்டர் பதிவில், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது.
நான் எனது பக்கத்தைத் திருப்புகிறேன். உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம் இது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது என பதிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தற்போது ஜன் ஸ்வராஜ் என்ற பெயரில் இயக்கம் தொடங்குவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற கேள்விக்கு அரசியல் கட்சி இப்போது தனது திட்டத்தில் ஒரு பகுதியாக இல்லை என தெரிவித்தார்.
மேலும் முதற்கட்டமாக பீகாரில் 3,000 கி.மீ. நடைபயணம் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளை மக்களைச் சென்றடையச் செய்வேன். முடிந்தவரை மக்கள் பலரை சந்திக்க அக்டோபர் 2 முதல் 3,000 கிமீ பாதயாத்திரை துவங்குவதாக அறிவித்துள்ளார்.