உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டு, காங்கிரஸ் புதிய பொதுச்செயலாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியாக பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக சில ஆண்டுகள் இருந்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி.
இந்த நிலையில், இன்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டு, காங்கிரஸ் புதிய பொதுச்செயலாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.