Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பிரதமரை கட்டியணைத்தவர் ராகுல்.. ஆனால் பாஜக..?” – பிரியங்கா காந்தி ஆவேசம்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (13:41 IST)
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கய்ட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்.பியாகவும் இருந்த ராகுல்காந்தி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியபோது பிரதமர் நரேந்திரமோடி குறித்தும் மோடி சமூகம் குறித்தும் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. அதில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய பிரியங்கா காந்தி “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டியணைத்து ‘உங்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை’ எனக் கூறியவர் எனது சகோதரர். ஆனால் பாஜக அவரிடம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளது. பாஜகவுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு மட்டும்தான் உள்ளது. பாஜகவை போல வெறுப்புணர்வு கொள்கை கொண்டவர்கள் இல்லை நாங்கள்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments