சமீபத்தில் மத்திய அரசு உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தியது. அவருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெற்றால் அரசு வீட்டில் இருக்கத் தகுதியற்றவர் என்ற நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டை பாஜக எம்பி ஒருவருக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பதும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அவர் காலி செய்யவில்லை என்றால் பராமரிப்பு கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து இன்று பிரியங்கா காந்தி டெல்லி வீட்டை காலி செய்தார். அவர் தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கப் போவதாகவும், ஒருசில வாரங்கள் கழித்து அவர் புதிய வீட்டில் குடியேற போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 2022ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வர உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தங்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன