பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார் மயமாக்குவது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறைவங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து முதல் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆவது குறித்து தமிழக எம்பிக்கள் திருமாவளவன்,ரவிக்குமார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு மனு அளித்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார் மயமாக்குவது என்பது குறித்து