Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிந்தார் கிரண்பேடி: முடிவுக்கு வந்தது தர்ணா போராட்டம்

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (07:49 IST)
புதுவை ஆளுனர் கிர்ண்பேடி மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 39 கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பதாகவும், அந்த கோப்புகளுக்கு உடனடியாக ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரியும் புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி தனது அமைச்சர்களுடன் ஆளுனர் மாளிகை முன் தர்ணா போராட்டம் நடத்தினார்

இந்த போராட்டம் ஒருவார காலம் நடந்த நிலையில் நிபந்தனையின்றி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆளுனர் கிர்ண்பேடி ஒப்புக்கொண்டார். இதன்படி நேற்று  ஆளுனர் கிரண்பேடி - முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான பேச்சுவார்த்தை ஆளுனர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் முதல்வரின் பெரும்பாலான கோரிக்கைகளை  கிரண்பேடி  பரிசீலிப்பதாக தெரிவித்ததால் தர்ணா போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது. முதல்வரின் போராட்டத்திற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் வந்து ஆதரவு கொடுத்ததால், கிரண்பேடி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments