மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த திடீர் விபத்தில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள நவலே பாலத்தில் நேற்று இரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதனால் டேங்கரில் இருந்த எண்ணெய் சாலையில் கொட்டியது.
இதனால் பின்னார் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. அடுத்தடுத்து மொத்தமாக 48 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டேங்கர் லாரியில் ப்ரேக் பிடிக்காததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.