பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 11 மணி தேர்தல் நிலவரம் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் இன்று 117 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து வருகிறது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுபோல உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி பஞ்சாபில் 17.77 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் உத்தர பிரதேசத்தில் காலை 11 மணி வரை 21.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மதியத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.