Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதவியை ராஜினாமா செய்தார் ஆளுநர்: தனிப்பட்ட காரணம் என அறிவிப்பு..

பதவியை ராஜினாமா செய்தார் ஆளுநர்: தனிப்பட்ட காரணம் என அறிவிப்பு..

Mahendran

, சனி, 3 பிப்ரவரி 2024 (15:23 IST)
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
இது குறித்து அவர் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்  
 
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆளுநர் பதவி என்பது நியமன பதவி என்பதை உணர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தவர் என்பது தெரிந்தது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தலில் 6 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியா? யார் யார்?