நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் படுதோல்வி அடைந்தது. நாடு முழுவதிலும் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
குறிப்பாக காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்யும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியை சற்றுமுன் ராகுல்காந்தி திடீரென கலைத்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் மட்டும் தங்கள் பதவிகளை அப்படியே தொடருவார்கள் என்றும் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் புதிய பொலிவுடன் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி உருவாகும் என்றும் கூறப்படுகிறது