Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (15:35 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி வயது மற்றும் உடல்நலம் கருதி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
 
இந்த பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் விரைவில் அதிகாரபூர்வமான காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின்றி தலைவராக தேர்வு பெற்ற ராகுல்காந்திக்கு காங்கிரஸார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிசம்பர் 16-ம் தேதி பதவி ராகுல்காந்தி பதவியேற்கவுள்ளார். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 6-வது பிரமுகர் ராகுல் காந்தி என்பதும் அவர் காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments